23 நீயுமொரு கிறுக்கென்றால் வா

நீயுமொரு கிறுக்கென்றால் வா
உன்னிடம் மட்டும் சொல்லத் துணிவேன் அதை.
பல படிப்பாளிகளுக்கும் பண்டித சிரோன்மணிகளுக்கும்
வாய்க்காத
மேதமையின் இரகசியத்தை நான் உனக்குச் சொல்கிறேன்:

”எல்லாச் சொற்களும் கிட்டத்தட்ட
ஒரே பொருளையே குறிக்கின்றன”
மனதில் வை. யாரிடமும் இதைச் சொல்ல முனையாதே
எனக்குப்போல் உனக்கொருவன் கிடைத்தாலன்றி

ஊமையொன்று ஓர்
ஊமைதேடிப் போகும்
சரளமாய்ப் பேசிக் கொண்டிருக்க.
எவ்வளவு கொடுமையானது ஊமையொன்று
உளறுவாயனிடம் மாட்டிக்கொள்வது

License

நீயுமொரு கிறுக்கென்றால் வா Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.