4 தவவெளி

சுருதி சேர்க்கப்பட்டு
விண்ணென்று நிற்கிறது வாத்தியம்.
உயிரின் உயிரெங்கும் ஆனந்தம் பெருகும்படி
யார் என்னை இங்ஙனம் தொடுவது?

எவருடைய விரல்கள் இவை;
என் நெஞ்சில் பதிந்து தன் காற்றைப் போக்கி
வெறுமையின் விளிம்புகளால் என்னைத் தொடுவது?
பற்றியதற்கே இவ்வளவு பரவசமென்றால்
பாட்டுக்கு என் உயிர் தாங்குமோ?

யாரிது, தன் தவவெளியில் நின்றபடி
முன்னும் இரு கண்களையும் உருட்டி
என்னை ஒரு சிறு பூச்சியெனத் தேடுவது?
இங்கே இருக்கிறேனடா இங்கே இங்கே என
எத்தனை முறை குரல் கொடுத்தும்
கண்டுகொள்ளல் கூடவில்லை.
நீ நிற்குமிடமடா நான்;
மேலும் சொன்னால்
உன் தவவெளி

License

தவவெளி Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.