52 தண்ணீர் லாரி

தெருக் குழாய்கள் இல்லாத
நகர் நோக்கி பசி போக்கத்
தாயாக ஓடிவரும்
நகராட்சித் தண்ணீர் லாரி.

பன்றிக் குட்டிகளாய் மொய்த்து
முலை நோக்கி மோதுங் குடங்கள்
தமக்குள்ளே இடித்துக்கொள்ளும்
ஆபாசமாய்க் கத்தும். கூச்சலிடும்

எங்கே அந்த பரிசுத்த அமைதி
எனத் தேடினால்
ஒரு நிழலோரம் லாரி டிரைவர்
பீடி புகைத்துக் கொணடிருப்பான்

License

தண்ணீர் லாரி Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.