59 காதல் மொழிகள்

நீயே என் இன்னுயிர் என் இதயம்
(ஆனால் என்னுள் கனல்வது
என் இதயத்தினின்றும் வெளியேறத் துடிக்கும் ஒரு வேகமே)
நாம் இப்படியே என்றும் இருப்போமா?
(நிரந்தரமற்றவை மத்தியில் நிரந்தரமானது
இந்தக் கணம் மட்டும்தான்)
நான் நோயில் விழுந்தால்
நான் என் படுக்கையாவேன்
என் கால்கள் முடமானால்
நான் உன்னைத் தூக்கி நடப்பேன்
உன்னை ஒரு நாளும் கைவிடமாட்டேன்
(உன் கைகளின் பிடிஇறுக்கம்தான் என்னை உறுத்துகிறது)
எப்போதும் உன்னுடன் இருப்பேன்
(ஆனால் நீ என்னைத் தேடக்கூடாது)
நான் இறந்தபிறகு நீ என்ன செய்வாய்?
(கேட்கக்கூடாத கேள்வி இது என்று
நீ உணரவில்லையா?)
மரணத்திலும் நான் உன்னைப் பிரியேன்
(ஆனால் சொற்களை நீ நம்பாதே)

License

காதல் மொழிகள் Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.