83 என்ன துயரமிது? என்ன தயக்கமிது?

இந்த இதயம்
ஒரு பெருவெடிப்பில்
கோடானு கோடி
அணுத் துகள்களாய்ச் சிதறி
இதயமற்ற இதயங்களனைத்தையும்
குறி தவறாது பாய்ந்து தீண்டி
நிகழ்த்திவிட வேண்டும்
ஒரு மாற்றத்தை.

அவ்வாறாயின்
இந்த வலியையும் மரணத்தையும்
ஏற்றுக் கொள்வதிலென்ன துயரமும் தயக்கமும்?

Comments are closed.