60 இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

உடல் களைத்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவேனேயன்றி

இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

 

பகலெல்லாம் வேலைகளில் கழிந்தது

அருகருகாய் அவரவர் வேலைகளில்

மவுனமாய் ஈடுபட்டபடி

நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள

நேரமில்லாமலாகி விட்டதால்

உன்னோடு உரையாடுவதற்காக

இந்த இரவு முழுக்க விழித்திருக்கவே விழைகிறேன்

 

இவ்வேளை செய்வதற்கும்

அரிய பல பணிகள் பாக்கியுள்ளன எனினும்

அவற்றை அவசரமாய்ச் செய்து முடிக்க வேண்டுமெனும்

உத்வேகம் போய்

ஒரு பயனுமற்ற செயலின்மைக்கு வந்துவிட்டேனோ

எனும் அச்சமோ பதற்றமோ இன்றி

அமைதியான…

இந்த இரவு முழுக்க உன்னோடு

உரையாட வேண்டி

விழித்திருக்கவே விழைகிறேன்

 

இந்ந இரவினுள்ளும் என்னுள்ளும்

இதுகாறும் ஒளிந்திருந்து

இன்று சந்தித்துக்கொண்ட

மா மவுனம் நீ

பெரு விழிப்பு

பேரறிவின் ஊற்று

பெருகி

இப் பிரபஞ்சமாய் விரிந்த

வெள்ளம்

வீடு

License

Share This Book

Feedback/Errata

Comments are closed.