87 அன்னாரை முன்னிட்டேயானாலும்

எண்ணற்ற ஆண்டுகளுக்குப்பின்
நான் இன்று கண்டடைந்துவிட்ட உறவுகள்
ஒருநாளும் சாகாதவர்கள்
மரணத்தை வென்றவர்கள்
நினைத்தவுடன் உறவாட
வந்து நிற்பவர்கள்
என்போல் எவருக்கும்
ஒரே சமயத்தில் எக்காலத்தும்

அப்படி ஒரு ஆகிருதியை
எப்படி அவர்கள் அடைந்தார்கள்?
அப்படி ஒரு ஆளுமையை
அடைவதுதான் என் இலக்கோ?

என் கால்களுக்கிடையே வந்து நின்று
ஆடையைப் பிடித்து இழுக்கிற பூனையே
கவலைப்படாதே என் செல்லமே
ஒருக்காலும் நானுன்ளைச் சிநேக ரத்து செய்பவனல்ல,
அன்னாரை முன்னிட்டேயானாலும்

License

அன்னாரை முன்னிட்டேயானாலும் Copyright © by தேவதேவன் (Devadevan). All Rights Reserved.

Share This Book

Feedback/Errata

Comments are closed.